Thursday, May 30, 2024

புதியதாக செய்யப்பட்ட தேருக்கு வலது துவாபர சக்தி பிரதிஷ்ட்டை


அருள்மிகு ஸ்ரீ செடிலாடும் செங்கழுநீர் மாரியம்மன் 110-ஆம் ஆண்டு தேர்த்திருவிழாவிற்கு புதிதாக உருவாக்கப்படும் தேரில் துவாரகா பாலகிகளில் வலது கையில் ஆல்காட்டி விரலை காட்டும் பாலகியை தேரின் வலது பக்கத்தில் ஊர் கூடி தேர் இழுப்போம் குழுவின் அனுமதியோடும் ஆதரவோடும் (உயரம் 7-அடி, அகலம் 11/4 அடி, கனம் 8") ஒரு லட்சத்து நூற்று பதினொரு ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டதை பாரத் கல்விக் கழக நிர்வாகி அரியாங்குப்பம் 118, வீராம்பட்டினம் வீதியில் வாழும் கி. பார்த்தசாரதிகவுண்டர் பா. உமாதேவி தம்பதியர் பிரதிஷ்டை செய்து வைத்தனர் இவர் சீ. இராதா (எ) கிருஷ்ணன் கவுண்டர் கி. திரிபுரசுந்தரி மகனும் அவ் வீட்டில் வாழ்ந்த த. குப்புக்கவுண்டர் கு. பெருந்தேவிதாயார், கு. சீனுவாசன் கவுண்டர் சீ. ஜானகியம்மாள் சந்ததியர் வழிவந்தவராவர்
பிரதிஷ்டை செய்த நாள்: மங்களகரமான குரோதி ஆண்டு சித்திரை மாதம் 26-ஆம் நாள் (9-5-2024) வியாழக்கிழமை பிரதமை திதி கார்த்திகை நட்சத்திரம் சித்தியோகம் கூடிய சுபதினம் மேஷ லக்கனத்தில்.
All